search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரே‌ஷன் அரிசி"

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 4 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சென்னையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளுர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் நாராயணபுரம் கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 4 டன் ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெத்தராமன், சரவணன், மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும், டிபன் கடைகளுக்கும் விற்பனை செய்ய அரக்கோணம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கிக்கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெத்தராமன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடியில் ரே‌ஷன் அரிசி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது 30 மூட்டைகளில் 1 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மணக்கரை அக்ஹார தெருவை சேர்ந்த இசக்கி துரை (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரே‌ஷன் அரிசியை ஒப்படைத்தனர். இசக்கி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் மணல் பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சின்னசாமி (வயது 37) என்பவருடைய வீட்டில் மொத்தம் 2,250 கிலோ எடை கொண்ட 75 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான விசாரணையில் கோழிப்பண்ணை மற்றும் டிபன் கடைகளுக்கு வழங்குவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து சின்னசாமியை கைது செய்தனர்.

    இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எப்படி அவருக்கு கிடைத்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி,  தொன்போஸ்கோ நகர் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த மினிலாரியை பிடித்து விசாரணை நடத்தினர். டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் திருப்பத்தூர் எல்.ஐ.சி. பின்புறம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த லோகநாதன் (வயது42) என்பதும், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதிக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.

    மேலும் இவருடன் தாமு என்ற வெங்கடேசன், அண்ணாமலை ஆகியோருடன் சேர்ந்து ரேஷன் கடத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் தாமு என்ற வெங்கடேசன், அண்ணாமலையை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×